கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி பழங்குடியின மக்கள் சார் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் 17 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தம்மம்பதி, புளியங்கன்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகளின் கான்கிரீட் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் நாள்தோறும் தவித்து வருவதாகவும், தம்மம்பதியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வந்த குடியிருப்புகளின், கட்டுமான பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த பழங்குடியின மக்கள், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, அடிப்படை வசதிகளை உடனே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.