வால்பாறை: வால்பாறை கவர்க்கல் எஸ்டேட்டில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறை கவர்க்கல் எஸ்டேட்டில் காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த காடம்பாறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கவர்க்கல் எஸ்டேட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய வால்பாறை உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் குழந்தைகள் திருமணம் வரதட்சணை கொடுமை கருக்கலைப்பு முதியோர் பாதுகாப்பு போக்சோ சட்டம் காவல்துறையின் Sos செயலி பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
பெண்கள் குற்றங்கள் பற்றி காவல்துறைக்குத் தகவல் அளிக்க இலவச தொலைப்பேசி எண்கள் 1098-மற்றும் 181-என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்துப் பேசிய காவல் ஆய்வாளர் கற்பகம் பணி செய்யும் இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி காவல்துறைக்கு உடனடியாக பெண்கள் தகவல் தெரிவிக்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 181-எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்தார்.
விழிப்புணர்வு சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பெண்கள் குறிப்பாகக் குழந்தைகள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க இரவு நேரங்களில் தனியாக நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கடந்த வாரம் கரடியால் தாக்கப்பட்டுக் காயமடைந்தவரின் குடும்பத்திற்கு அரிசி மளிகை காய்கறி நிவாரண உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன். வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் தலைமைக் காவலர் மற்றும் காவலர்கள் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.