மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சிக்குட்பட்ட மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மற்றும் மக்கும் குப்பைகளை  அந்தந்த நிறுவனங்களே சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்காத குப்கைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், கோவை மாநகராட்சி மற்றும் தூய்மை பாரத இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் அனைத்து குடியிருப்புகள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறக் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தளங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் சேகரம் செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் மேற்கண்ட அனைத்து நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் மறுசுழற்சிக்கு தகுதியான குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். 

மேலும், மக்கும் குப்பைகளை அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பில் அவர்களது வளாகத்திலேயே இயற்கை உரம் மற்றும் இயற்கை வாயு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை 2017 மார்ச் 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். 

மேற்படி பணிகளை மேற்கொள்ள தேவையான தொழில்நுட்ப உதவிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் கோவை மாநகராட்சியை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...