வால்பாறை அருகே மரத்தில் சிக்கி கொண்ட கரடி பத்திரமாக மீட்பு.!! வனத்துறை சிகிச்சை மையத்தில் சிகிச்சை.!!

கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறிய கரடி மரத்தின் கிளையில் கை மாட்டிக் கொண்டதால் கீழே இறங்க முடியாமல் தவித்தநிலையில், வனத்துறையினர் கரடியை காப்பாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: வால்பாறை அருகே மரத்தின் மீது ஏறிய கரடி மரத்தின் கிளையில் கை மாட்டிக் கொண்டதால் கீழே இறங்க முடியாமல் தவித்தநிலையில், வனத்துறையினர் கரடியை காப்பாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே இன்று வாட்டர்ஃபால் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது ஏறி நின்று சத்தம் போடுவதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர்.



சில மணி நேரங்களாக மரத்தில் கரடி இருப்பதைக் கவனித்த பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்த்ததில் கரடி மரத்தின் மீது ஏறி அதன் கை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டதால் கரடி கீழே இறங்க முடியாமல் தவிப்பது தெரியவந்தது.

அதன்பிறகு வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கரடியை மரத்திலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் கீழ் தேயிலைத் தோட்டத்தில் மேலும் இரண்டு கரடிகள் சுற்றி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் கரடி அருகில் செல்லாமல் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று மாலை வால்பாறை சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் முனியாண்டி, மணிகண்டன், சக்திவேல், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கரடியைக் காப்பாற்ற மரத்தின் மேல் கயிறு கட்டி மரத்தை அடியோடு வெட்டி மரத்தைச் சாய்த்து கரடிக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க மருந்து செலுத்தி கரடியைப் பிடித்து பரிசோதனை செய்து கரடியின் இடது கையில் காயம் ஏற்பட்டு உள்ளதைக் கண்காணிக்க சிகிச்சை அளிக்க ரொட்டிகடை மனித வன தடுப்பு மோதல் மற்றும் வன விலங்குகள் சிகிச்சை மையத்திற்குக் கரடியைக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கையில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டபின் கரடியை வனப் பகுதியில் விடப்படும் என வனத்துறை தெரிவித்தனர்.



Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...