காளப்பட்டி பகுதியில் சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட 66-சென்ட் இடம், சட்டவிரோதமாக 7-பேருக்கு விற்பனை.!! இடத்தை மாநகராட்சி மீட்டு சமுதாயக் கூடம், பூங்கா அமைத்து தர வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்.!!

கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட 66-சென்ட் இடம், சட்டவிரோதமாகத் தனியார் 7-பேருக்கு விற்பனை செய்யப்பட்டது. இடத்தை மாநகராட்சி மீட்டு சமுதாயக் கூடம், பூங்கா அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட 66-சென்ட் இடம், சட்டவிரோதமாகத் தனியார் 7-பேருக்கு விற்பனை செய்யப்பட்டது. இடத்தை மாநகராட்சி மீட்டு சமுதாயக் கூடம், பூங்கா அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி நேரு நகரில், நகர் ஊரமைப்புத்துறை அனுமதி பெற்று பெரியார் நகர் அமைக்கப்பட்டது. 35-வது வார்டுக்குட்பட்ட இந்த நகரில் மொத்தம் 12.14 -ஏக்கரில், 138-மனைப்பிரிவுகளாக பிரித்து விற்கப்பட்டது.

நகரில், சமுதாயக் கூடத்திற்கு 66-சென்ட், பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடும் இடத்துக்கு 55-சென்ட், மேல்நிலைத்தொட்டி அமைக்கும் இடத்திற்கு 4 .5-சென்ட் இடம் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.



இந்த இடங்கள், காளப்பட்டி பேரூராட்சி வசம் இருந்த நிலையில், தற்போது இந்த இடம் மாநகராட்சி வசம் உள்ளது. இதில், சமுதாயக்கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட 66-சென்ட் இடம், சட்டவிரோதமாகத் தனியார் 7-பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

66-சென்ட் இடம் 10-சைட்களாக பிரிக்கப்பட்டு, கடந்த, 1989-ல், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்து முதலில் விற்கப்பட்டிருப்பதும், அதன்பின், 1995ல், கோவை காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைக்கட்டணம் செலுத்திப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி சமுதாயக்கூட இடத்தின் மதிப்பு, 10-கோடி ரூபாய் எனக்கூறும் பெரியார் நகர் குடியிருப்பு வாசிகள், மாநகராட்சி இணையதளத்தில், இந்த இடம் பொது ஒதுக்கீடு இடமாக, சமுதாயக்கூட இடம் பட்டியலிடப்பட்டு, ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டும் பல ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.



10 -ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த பிரச்சினையை அறிந்த பெரியார் நகர் குடியிருப்பு வாசிகளின் கோரிக்கை அடுத்து, கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ள போதும், அந்த பலகை அகற்றப்பட்டு அந்த இடத்தை முறைகேடாக வாங்கிய தனியாரால் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.



பெரியார் நகர் குடியிருப்பு வாசிகள் தொடர் மனு அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது மீண்டும் அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டும், தனியாரால் வைக்கப்பட்ட கம்பிவேலியோ, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவில்லை என சுட்டிக்காட்டும் குடியிருப்பு வாசிகள், ஏற்கனவே, 66-சென்டில் பெரிய வீடு, சிறிதாக 3- குடிசை வீடுகள் என ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடத்தை வாங்கியவர்கள் வேறு சிலருக்கு விற்கும் முன்பு அந்த இடத்தை மாநகராட்சி மீட்டு சமுதாயக் கூடம், பூங்கா அமைத்துத் தர வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...