திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் கடத்தப்பட்ட மகனை, காவல்துறையிடம் சொல்லாமல் 3-கோடி கொடுத்து மீட்ட வழக்கில் 4-நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மகன் சிவபிரதீப். நேற்று மதியம் அலுவலகம் சென்று வீடு திரும்பும் போது, 7-நபர்கள் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தையின் செல்லுக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், 3-கோடி வேண்டும் என்றும் காவல்துறையிடம் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். பயத்தின் காரணமாக காவல்துறையிடம் செல்லாமல் கடத்தல்காரர்கள் கேட்ட 3-கோடி பணத்தைக் கொண்டு போய் கொடுத்து மகனை மீட்டு காங்கேயம் வந்துள்ளார்.

அதன் பிறகு, ஈஸ்வரமூர்த்தி காங்கேயம் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தற்போது திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் சக்திவேல், அகஸ்டின், பாலாஜி, பசீர் ஆகிய 4 -நபர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து 1-கோடியே 89- லட்சத்து 94-ஆயிரம் ரூபாய் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். உடன் கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய் இருந்தனர். மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறுகையில், நேற்று மதியம் 1-மணி அளவில் சிவபிரதீப் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள் கேட்டவுடன் 3-கோடியைத் திண்டுக்கல் கொண்டு போய் தந்தை கொடுத்துள்ளார். மகனை மீட்ட பின்னர் 8.30 மணி அளவில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது.
8-தனிப்படைகள் அமைத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது என்றார். புகார் அளிக்கப்பட்ட 6-மணி நேரத்தில் குற்றவாளிகள் 3-பேர் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்றும், கிருஷ்ணகிரியில் 1-நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
தனிப்படைகள் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்குப் பாராட்டு தெரிவித்தவர், சிசிடிவி பெரிய தடயமாக எங்களுக்கு உதவியது என்றும் சிறுமலை பகுதியில் சோதனைச்சாவடி சிசிடிவி, அடையார் ஆனந்த பவன் சிசிடிவி ஆகியவற்றை வைத்து வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
குற்றவாளிகளுக்கும் எங்களுக்கும் 3 -மணி நேர இடைவெளி இருந்தது. அதனை சிறப்பாக காவல்துறை கையாண்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். குற்றவாளிகளில் இருவர் இவரின் அரிசி ஆலையிலேயே கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்கள் இங்கு வேலை செய்யும் போது தான், இவர்களிடம் நிறையப் பணம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்.
பொதுமக்களுக்கு அறிவுரையாகக் கூறும் போது தங்களிடம் பணம் உள்ளதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது, அதே போல் நம் பலவீனத்தைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்றார்.
கடத்தல்காரர்கள் 1-வாரமாகக் காங்கேயம் பகுதியில் தங்கி வேவுபார்த்துள்ளார்கள். அதன்படி கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என்றார். மேலும் , சிவபிரதீப் வந்துள்ள வாகனத்தை வழிமறித்து, நாங்கள் போலீஸ் என கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர்.
அதனால் அவர்கள் வாகன கதவை திறந்தனர். பின்னர் கடத்தியுள்ளனர் எனவும் கடத்தல் சம்பவம் குறித்துக் கூறினார். மகனைக் கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் பணத்தை கொடுத்துள்ளனர்.
மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளதை அறிந்து, காவல்துறையிடம் போக மாட்டார்கள் என கணித்துத் தான் கடத்தல் கும்பல் இச்சம்பவத்தை நடத்தியுள்ளது என்றவர், இருவர் மட்டுமே வருவதை உளவாளி மூலமாக அறிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடத்தல்காரர்களைப் பிடிக்க மதுரை, கிருஷ்ணகிரி காவல்துறையினர் உதவி செய்துள்ளனர் என்றார். சில ஆங்கல படங்களில் கடத்தல் சம்பவங்களைப் பார்த்ததால் இந்த ஐடியா வந்ததாகக் கடத்தல் கும்பல்கள் தங்களிடம் கூறியதாகவும் கோவை சரக ஐ.ஜி சுகுமார் கூறினார்.