பல்லடம்-பொள்ளாச்சியில் சாலையோர 80-அடி ஆழ விவசாய கிணற்றில் கார் பாய்ந்து விபத்து.!!

திருப்பூர்: பல்லடம்-பொள்ளாச்சியில் சாலையோர 80-அடி ஆழ விவசாய கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் 2-பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம்-பொள்ளாச்சியில் சாலையோர 80-அடி ஆழ விவசாய கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் 2-பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே பல்லடத்தில் இருந்து காமநாயக்கன்பாளையம் நோக்கிச் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த 80-அடி ஆழ விவசாய கிணற்றினுள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறை சம்பவ இடம் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த ஒண்டிபுதூரை சேர்ந்த பெட்ரோல் பங்க் அதிபர் கவுசல் குமார் (22) அவருடன் காரில் பயணித்த ஹரிஷ் (18) ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் முதலுதவி சிகிச்சைக்காகத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கிணற்றினுள் சிக்கியிருந்த சொகுசு காரை போலீசார் மீட்டனர்.



இந்த விபத்தின் காரணமாக பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே விவசாய கிணற்றில் அதிவேகமாகச் சென்ற கார் பாய்ந்து நிகழ்ந்த விபத்தில் பெட்ரோல் பங்க் அதிபர் உள்பட 2-பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...