கோவை: ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் திட்டம் 96-செண்டில் 648-மரக்கன்றுகள் மியா வாக்கி முறையில் நடவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி அருகே அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் எம்ரால்டு கிரீன் பீல்டு பொது ஒதுக்கீடு பூங்கா இடத்தில் 96-செண்டில் 648-மரக்கன்றுகள் மியா வாக்கி முறையில் மாநகராட்சி சார்பாக நடவு செய்யப்பட்டது.
கோவை மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. பல இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாநகர் பகுதிகளைப் பசுமையாக்க ரிசர்வ் சைட்டுகளில் அடர் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் சார்பாக முதல் கட்டமாக மாநகர் பகுதிகளில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 100 ரிசர்வ் சைட்டுகளில் அடர்வனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து அதற்கான ஸ்பான்சார் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்குட்பட்ட சரவணம்பட்டி அருகே அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் எம்ரால்டு கிரீன் பீல்டு பொது ஒதுக்கீடு பூங்கா இடத்தில் ஆதாவது ரிசர்வ் சைட்டில் 96-செண்டில் 648-மரக்கன்றுகள் மியா வாக்கி முறையில் மாநகராட்சி சார்பாக நடவு செய்யப்பட்டது,’’ என்றார்.
இந்த நிகழ்வின் போது மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மாநகர பொறியாளர் லட்சுமணன் செயற்பொறியாளர் ஞானவேல், நகரமைப்பு அலுவலர் (ஆக்கிரமிப்பு அகற்றுதல்) ரவிச்சந்திரன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.