கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 17-மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 11-உயர்நிலைப்பள்ளிகளில் 01.09.2021 முதல் 9, 10, 11, மற்றும் 12 வகுப்புகள் வரை நடத்தத் தயார் படுத்துதல் சார்ந்த ஆய்வுக் கூட்டம் இன்று 23.08.2021 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் இயக்கப்பட வேண்டும் எனவும், மாணவ/மாணவிகளின் உடல் வெப்பத்தை வெப்பமானி கொண்டு கண்டறிதல் மற்றும் சானிடைசர்கள்/சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றினை பள்ளித் தலைமையாசிரியர்கள் கண்காணிக்கவும், ஆசிரியர்கள், ஆசிரியா் அல்லாதா பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திடவும், மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யவும், பள்ளிகளில் உள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தமாகக் கழுவி உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும், குடிநீர்த் தொட்டிகள் கழுவப்பட்ட நாள் சார்ந்த விவரங்கள் கரும்பலகையில் தேதியுடன் குறிப்பிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமலராஜ், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி நகர் நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், உதவி ஆணையர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், உதவி ஆணையர் (பணியமைப்பு) சரவணன், உதவி ஆணையர் (கணக்குகள்)மோகன சுந்தரி, மாநகராட்சி கல்வி அலுவலர் மைக்கேல்ராஜ், மாமன்ற செயலாளர் ஆ.அமல்ராஜ், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.