வால்பாறை: வால்பாறையில் படிக்கட்டுகளில் பாசானை போக்க சுண்ணாம்பு தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை நகரப்பகுதியில் உள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம், அண்ணா நகர், கோஆபரேட்டிவ் காலனி, துளசிங்க நகர் உள்ள படிக்கட்டுகளில் பாசான் அதிகரித்துள்ளது.
இதனால் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. படிக்கட்டுகளில் செல்லும் மக்கள் வழுக்கி விழுவதைத் தடுக்க பாசானை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் வால்பாறை நகராட்சிக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் வால்பாறையில் உள்ள அனைத்து படிக்கட்டிகளிலும் சுண்ணாம்பு தூவி பாசானை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக மக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.