கோவை: தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழக முதலமைச்சர் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். இது பெரும்பாலான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் இன்று இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்து கொண்டு பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எடுத்துரைத்தார். ஆனால், அதை சட்ட வடிவமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அனைத்து மக்களும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி கோவிலுக்குச் செல்லலாம். அர்ச்சகர் படிப்பு முடித்தவர்கள் அர்ச்சகர் பணிகளை மேற்கொள்ளலாம். இத்திட்டம் பிராமணர் சமுதாயத்திற்கு எதிரானது அல்ல அனைத்து ஜாதியினரும் ஒரே தொழிலை செய்வது போல அர்ச்சகத் தொழிலும் அனைத்து ஜாதி மக்களும் செய்யலாம் என்பதைதான் இத்திட்டம் வலியுறுத்துகிறது.
இதற்காக தமிழக முதல்வருக்கு அனைத்தரப்பு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.