கோவை: கோவையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜவீதி, பெரிய கடை வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசை வலியுறுத்தி தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ராஜவீதி, பெரிய கடை வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசை வலியுறுத்தி தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்க நகைகளுக்கு இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தங்க நகை தயாரிப்பாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் ராஜவீதி, பெரியகடை வீதி உட்பட நகரில் உள்ள தங்க நகை தயாரிப்பாளர்கள், 500க்கும் மேற்பட்ட தங்க நகைகடைகளை இரண்டு மணி நேரம் அடைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 9 மணி முதல் 11.30 வரை கடைகளை அடைத்து, கடைகளின் முன்பாக கோரிக்கை அட்டைகளுடன் நகை கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய நடைமுறையால் சிறு, குறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், Huid முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
மேலும், கோவை உட்பட தமிழகம் முழுவதும் போதுமான ஹால்மார்க் மையங்கள் இல்லாததால் தயாரிக்கப்பட்ட தங்கநகைகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், புதிய நடைமுறையை தவிர்த்து பழைய முறையே தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.