கோவை விமான நிலையத்தில் தினமும் 15 விமானங்கள் இயக்கம்: Go Air, 'Spice Jet' விமானங்கள் சர்வீஸ் மீண்டும் துவக்கம்!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ள நிலையில், Go Air, 'Spice Jet' விமானங்கள் சர்வீஸ் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ள நிலையில், Go Air, 'Spice Jet' விமானங்கள் சர்வீஸ் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விமானங்கள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மே மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்தது. ஜூலை மாதத்தில் 11 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக விமான சேவையை நிறுத்திய 'Go Air', 'Spice Jet' நிறுவனங்களின் விமான சேவை மீண்டும் துவங்கியுள்ளது.

இது தொடர்பாக ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் தற்பொழுது உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டில்லி, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கும் சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜாவுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

நோய் தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக சேவையை நிறுத்திய 'Go Air', 'Spice Jet' நிறுவனங்கள் விமான சேவையை துவங்கியுள்ளன. இருப்பினும் அடிக்கடி இந்த நிறுவனங்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

அதேசமயம், நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து எதிர்வரும் நாட்களில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...