கோவையில் தவறாக பதிவு செய்யப்பட்ட PCR வழக்கினை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவையில் தவறாக பதிவு செய்யப்பட்ட PCR வழக்கினை ரத்து செய்து உண்மைக்கு புறம்பான புகார் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் தவறாக பதிவு செய்யப்பட்ட PCR வழக்கினை ரத்து செய்து உண்மைக்கு புறம்பான புகார் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.



அன்னூர் ஒட்டார்பாளையம் கிராமத்தில் கடந்த 6ம் தேதி அன்று பட்டா மாறுதல் சம்பந்தமாக கோபால்சாமி என்ற விவசாயி கிராம நிர்வாகியிடம் கூறிக்கொண்டிருந்த போது அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக உதவியாளர், கோபால்சாமியை தரம் தாழ்த்தி பேசி, கொலை வெறி தாக்குதல் அரங்கேறியுள்ளது என்று புகார் மனு தாக்குதல் செய்துள்ளனர்.

மேலும், கிராம நிர்வாகி தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தான் அரசு அலுவலர் என்றும் பாராமல், தன்னை தாழ்த்த பட்ட சமூதாயத்தை சேர்ந்தவன் என்று கூறி தன்னை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர் என்று விசாரணை அதிகாரிகளிடம் பொய்யான தகவலை கூறி அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புகைப்பட ஊடக நிருபர், கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் உதவியாளருக்கு உறுதுணையாக இருந்து உண்மைக்கு புரம்பாக தகவலை வெளியிட்டுள்ளனர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவன் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, இவ்வறான பொய்யான புகார்களை கொடுக்கின்றார்கள். இது போன்ற சம்பவங்கள், மற்ற சமுதாயத்தை பெரிதும் பாதிப்புக்கு செயல்கள், ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இது போன்ற செயல்கள் சமுதாயத்தினரிடம் உணர்வுகளை தூண்டியுள்ளது.

மேலும், இது போன்ற செயல்களை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று கூறி பொய்யான வழக்குகள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

எனவே, இதனை கருத்தில் கொண்டு உண்மைக்கு புறம்பான புகாரினை கொடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நிருபர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர். சிவக்குமார் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.



மேலும், இதன் நகல்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோவை மேற்கு மண்டலம் காவல்துறை தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...