கோவை: உடுமலையில் குடிபோதையில் மருத்துவமனையில் ரகளை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை நகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை சிகிச்சைக்காக சிலர் வந்துள்ளனர். ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாகவும் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, மருத்துவர் வேறொரு நோயாளியைப் பார்த்து வருவதால் சிறிது நேரம் காத்திருங்கள் என கூறியுள்ளனர். ஆனால், தங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டுமென அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் மிரட்டியுள்ளனர்.
இதனை அங்குள்ள செவிலியர் பொருட்படுத்தாமல் இருந்ததாக கூறி, அந்த கும்பல் ரகளையில் ஈடுபட்டது. மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து தகாத வார்த்தைகளை பேசியுள்ளனர். இதனால் மருத்துவமனை வாயில் கதவு பூட்டப்பட்டது. இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு வெளியே இருந்து அவர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.
பின்னர், இப்பிரச்சினை தொடர்பாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.