பொள்ளாச்சி ஆழியார் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது - உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கோவை: கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியதால், உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியதால், உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்ததால், இந்த ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை மற்றும் ஆழியாறு அணை நீர்மட்டம் அதிகரித்தது. இதில் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் நேற்று 119 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை குளங்களுக்கு திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பின்னர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு உபரி நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

இதில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உபரிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், பொள்ளாச்சி கால்வாயில் 200 கன அடியும், வேட்டைக்காரன் புதூர் கால்வாயில் 48 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் பாலாறு படுகை மற்றும் ஆழியாறு படுகையில் உள்ள சமத்தூர் எலவக்கரை குளம், ஆனைமலையை அடுத்த குப்புச்சிபுதூர் குளம், பாப்பத்தி பள்ளம் குளம், மேலும் கரியாஞ்செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள 7 தடுப்பணைகள், மஞ்சநாயக்கனூரில் உள்ள 25 தடுப்பணைகள் பில்சின்னாம்பாளையத்தில் உள்ள குட்டைகளுக்கும், தடுப்பணைகளுக்கும் உபரிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

ஆழியார் அணை உபரி நீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, வரும் காலங்களில் விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த பொள்ளாச்சி விவசாயிகள், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...