கோவை: 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் சற்று முன்பு இணையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவை வருகிற 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்ய கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களை தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது. அதேநேரம், உயர்கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியானது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பள்ளிகளும் பதிவிறக்கம்
எனவே, பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.