ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவிற்கு தடை.! கோவைக்கு புதிய கொரோனா தளர்வுகள் என்ன? - ஆட்சியர் விளக்கம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.



 கோவை: நேற்று தமிழக அரசு, கொரோனா தளர்வுகள் குறித்து அறிக்கையை வெளியிட்டது.இந்த நிலையில், அவற்றில் என்னனென்ன தளர்வுகள் கோவைக்கு பொருந்தும்? என கோவை மாவட்ட ஆட்சியர், சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கானது 23.08.2021 காலை 6 மணி முதல் 06.09.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், மண்டல மற்றும் கோட்ட அளவில் வணிக சங்க பிரதிநிதிகளுடன் கோவை மாநகராட்சி ஆணையர், சார் ஆட்சியர் / கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. அதன்படி, தமிழக அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி/கல்லூரி திறப்பு.

01.09.2021 முதல் அனைத்து பள்ளிகளிலும் 9,10,11,12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

01.09.2021 முதல் அனைத்து கல்லூரிகளும் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேற்படி, அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், காப்பகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், காப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை சம்மந்தப்பட்ட கல்வி / பள்ளி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

விளையாட்டு பயிற்சி

நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகள், 50 சதவீத பயிற்சி பெறுபவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கேளிக்கை விடுதிகள்/ பூங்காக்கள்

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதி. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட ஆக அனுமதிக்கப்படுகிறது.

சேவை நிறுவனங்கள் 

தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடைகள் செயல்பட தளர்வுகள்/,தடைகள் என்னென்ன ? 

அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23.08.2021-லிருந்து இரவு 10.00 மணி வரை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி ஆணையரால் இன்று வணிகர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, ஆகிய தெருக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் 

அனுமதி 

மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் 23.08.2021 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி. திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை திரையரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாவிற்கு/மால் செல்ல தடை..! 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து மால்களும் (Malls) ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தை (25.08.2021 முதல்) தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது.

கோவை - கேரள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு 

கோவை மாவட்டம் கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதாலும் தற்போது மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தொற்றை மேலும் குறைப்பதற்காக கீழ்க்காணும் கூடுதல் கட்டுப்பாடுகள் 23.08.2021 முதல் விதிக்கப்படுகிறது.

கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திற்குள் விமானம், தொடர்வண்டி, மேற்படி சோதனை சாவடி வழியாக வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவனைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

பொது மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவற்றை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்

நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...