திருமூர்த்தி மலைவாழ் மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கிய உடுமலை துணை கண்காணிப்பாளர்

திருப்பூர்: உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று திருமூர்த்தி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்.



திருப்பூர்: உடுமலைப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இன்று திருமூர்த்தி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்.

காடுகளில் இருந்து எடுத்து வரும் தேன், தானிய வகைகள், மூலிகைகள் போன்றவற்றை ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்போல் விற்க முடியாத சூழல் நிலவி வருவதால், மலைவாழ் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து வரும் இந்த மலைவாழ் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தனியார் நன்கொடை மூலமாக அம்மக்களுக்கு தேவையானநலத்திட்ட உதவிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று திருமூர்த்தி மலையில் வாழும் மலைவாழ் மக்களுக்கு, நலத்திட்ட உதவிகளை உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வழங்கினார். அரிசி, பருப்பு, மளிகை அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை சுமார் 100 மலைவாழ் மக்களுக்கு வழங்கினார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...