பொள்ளாச்சியில் அஜாக்கிரதையாக வந்த லாரி சுற்று சுவர் மீது மோதி விபத்து.!! 2-குழந்தைகள் உட்பட 6-பேர் படுகாயம்.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சாலையில் அஜாக்கிரதையாக வந்த லாரி சுற்று சுவர் மீது மோதி விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சாலையில் அஜாக்கிரதையாக வந்த லாரி சுற்று சுவர் மீது மோதி விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு தங்கம் தியேட்டர் அருகேதனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து நேற்று இரவு நூல் பண்டல் ஏற்றிய லாரி, வால்பாறை சாலை செல்ல ஓட்டுநர் அஜாக்கிரதையாக திருப்பியுள்ளார். அப்போது, லாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீதுமோதியது.



அப்போதுசாலையோரம் இருந்த பேல்பூரி தள்ளுவண்டிகடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொது மக்கள், போலீசாருக்குதகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்குவிரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு,இடிபாடுகளில் சிக்கியிருந்த,4-வயது குழந்தைகள் நித்தீஷ், சிவன்யா, பேல்பூரி கடைகாரர் லக்கி குமார், 14-வயது சிறுவன் கிஷோர்உள்ளிட்ட, 6-பேரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...