வால்பாறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீர் அமைக்க பொது மக்கள் கோரிக்கை!!


கோவை: வால்பாறையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையைப் பராமரிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், சுமார் 60-எஸ்டேட்உள்ளன. அங்குச் செல்வதற்குச் சாலை வசதி உள்ளன. அரசு பேருந்து சென்று வருகின்றன. வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியிலிருந்து, பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் செல்வதற்கு முக்கிய சலையாகும்.

இதில் சோலையார் எஸ்டேட் பகுதியிலிருந்து சங்கிலி ரோடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் குண்டும் குழியுமாக இருந்த சாலையைப் பராமரிக்கக் கடந்த ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஜல்லி கற்கள் போன்றவை சாலையில் போடப்பட்டுப் பணி துவங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தால் பணி பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்த பணியை முடிக்காமல் சாலைமேலும், குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இந்த சாலையில், இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர சிறிய கார்கள் வரும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.



இரவு நேரத்தில், வரும் இரண்டு சக்கர வாகனங்கள் வழி தெரியாமல் சேற்றிலும் குழுவிலும் சிக்கி அவதிப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் 15-கிலோமீட்டர் தொலைவு வரைக்கும் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் போக்குவரத்து அவ்வப்போது தடை ஏற்படுகிறது.

அப்பகுதியில்108-ஆம்புலன்சில் வருவதற்கும் சிரமமாக உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அந்த சாலை சீரமைப்பு பணியை ஆரம்பித்து சாலையைப் புதுப்பித்துத் தர அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...