மிளகாய் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1500-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!! பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 1500-கிலோ ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 1500-கிலோ ரேஷன் அரிசி பதுக்கி கடத்த முயன்ற ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார்கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு பகுதியில் சண்முகவடிவேல் என்பவருக்கு சொந்தமான மிளகாய் குடோன் செயல்பட்டு வருகிறது.

சண்முகவடிவேலின் மகன் பிரபுராம் (42) என்பவர் தமிழக அரசு சார்பில், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி, அவருடைய மிளகாய் குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் குடோனில் சோதனையிட்டதில், சுமார் 1500-கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட கிழக்கு காவல் நிலைய போலீசார், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பிரபுராமை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு போலீசார் பிரபுராம் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...