வடவள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான 5-கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு!!

கோவை: வடவள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: வடவள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வடவள்ளி கிராமம் மருதமலை ரோடு பகுதியில் 7.15-ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 77-மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

71-சென்ட் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 10%, 9-சென்ட் கடைகளுக்காக நகர ஊரமைப்பு முதுநிலை மண்டல துணை இயக்குனரின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரிசர்வ் சைட் இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து கோவை மாநகராட்சி செயற்பொறியாளர் (ஆக்கிரமிப்புகள்) ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் இடத்தை மீட்டெடுத்து அங்கு அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.



இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தின் மதிப்பு 5-கோடி ரூபாய் இருக்கும். 40-வருடங்களாக இந்த இடத்தை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்து 30-தென்னை மரங்களுடன் 50-மாடுகள் வைத்து ஒருவர் பால் வியாபாரம் செய்து வந்ததாகத் தெரிகிறது. தற்போது மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை மீட்டு எடுத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது'.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...