பொள்ளாச்சி அருகே மாமனாரின் கை கட்டை விரலை கடித்த மருமகன் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாரின் கை கட்டை விரலை கடித்த மருமகனை கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாரின் கை கட்டை விரலை கடித்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (63). இவரது மகள் சத்யா (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சத்யாவிற்கும் மணிமாறனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று அவர் தான் தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். மனைவியை அழைத்துச் சென்ற கணவர் மணிமாறன் மற்றும் அவருடைய மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் மணிமாறன் மாமனாரின் கை கட்டை விரலை கடித்துள்ளார். இதுதொடர்பாக, பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...