கோவை: பொள்ளாச்சி அருகே மரத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் பிரிவில், பழைய காவல்துறை சோதனை சாவடி அருகே நேற்று மரத்தின் மீது ஏறி ஒருவர் கீழே குதிக்கப் போவதாக அச்சுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சென்றனர். இதையடுத்து மரத்தின் மீது ஏறி நின்ற நபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அவரை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் உதவியோடு தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரத்தின் அடியில் வலையை விரித்து நின்று கொண்டிருந்தனர். இதே சமயத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி முதியவரை கயிறு கட்டி மீட்டனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துரையன்(55), என்பதும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.