வால்பாறையில் சந்தேகத்தால் மனைவியை கட்டையால் அடித்த கணவன்..! மனைவி படுகாயம்!

கோவை: வால்பாறையில் சந்தேகத்தால் மனைவியை கட்டையால் கணவன் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் சந்தேகத்தால் மனைவியை கட்டையால் கணவன் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் LD பகுதியில் தேயிலை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகா (35). இவருடைய கணவர் கண்ணன் லாரி ஓட்டுநர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மகாவீர், சேகர் உள்ளனர்.

இந்நிலையில், கனகாவின் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இன்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்ணன் தன்னுடைய மனைவி கனகாவை கட்டையால் தாக்கியுள்ளார்.



இதில் கனகாவின் மண்டை உடைத்து பலத்த காயம் இடதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போது, கனகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்குள்ள தனியார் வண்டியில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர், மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...