கோவை: கோவை கணபதி பகுதியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.1.7 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
கோவை கணபதி அடுத்த அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் ஆதி ஹோண்டா ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று முன்தினம் இரவு, விற்பனைத் தொகை ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சாவியை செக்யூரிட்டி ரகுமான் என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை தூய்மைப் பணியாளர் முருகையா என்பவர் ஷோ ரூம் சேல்ஸ் மேனேஜர் ஸ்ரீராமுவிற்கு செல்போன் மூலம் அழைத்து ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டது போல இருப்பதாக கூறினார்.
இதையடுத்து, நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது, ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், உள்ளே லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சேல்ஸ் மேனேஜர் ஸ்ரீராம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.