கோவை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.
1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.
வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.
தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி.
மேலும், 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சாரந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர்
காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி
செலுத்தியிருக்க வேண்டும்.
அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி பெருந்தொற்று நோய பரவலை தடுத்திட நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.
நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொறறு அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். .
மேலும், அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.