10 வயதுக்கு கீழான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கினால் உதவிகள் பெற வசதியாக இருக்கும் - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

கோவை: 10 வயதுக்கு கீழாக இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அடையாள அட்டை வழங்கினால் அவர்களும் உதவிகள் பெற வசதியாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: 10 வயதுக்கு கீழாக இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அடையாள அட்டை வழங்கினால் அவர்களும் உதவிகள் பெற வசதியாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மக்கள் சேவை மையம் மற்றும் சசஷம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மோடி மகள் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, மோடி மகள் திட்டத்தின் கீழ் 25 குழந்தைகளுக்கு 10,000 ரூபாய் காசோலை, மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வானதி சீனிவாசன் வழங்கினார். மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான மாற்று திறனாளிகள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது எனவும், 10 வயதுக்கு கீழாக இருக்கும் குழந்தைகளுக்கும் அடையாள அட்டை வழங்கினால் அவர்களும் உதவிகள் பெற வசதியாக இருக்கும் எனவும் தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், இந்த நிதி அறிக்கையில் மாற்று திறனாளிகளுடன் இன்னொருவரும் சேர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால், இந்த அனுமதி நகர பேருந்துகளில் மட்டும் வழங்கப்படுகின்றது எனவும், தொலைதூர பேருந்துகளிலும் இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக ஆட்சியில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாக வந்த புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரிக்கட்டும் என தெரிவித்த அவர், புதிய ஆக்கப்பூர்வமான அரசாங்க திட்டங்கள் வேண்டுமே தவிர, கடந்த ஆட்சியில் நடந்தவை மீது மட்டும் கவனம் செலுத்துவதில் என்ன பயன் உண்டு. எந்த திட்டங்களாக இருந்தாலும் மக்களுக்கு போய் சேரவேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம், ஆனால் பாராட்ட மனதிலாத நிதி அமைச்சர், எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கொண்டு சேர்க்கிறோம் என்கிறார்கள்.

மத்திய அரசு நேரடியாக செய்யும் திட்டங்களை மாநில அரசிடம்தான் கொடுக்க வேண்டும், இது எங்கள் உரிமை என்று அவர் சொல்வார் என்றால், யாருக்காக இந்த திட்டங்கள் கொடுக்கப்படுகின்றது என்பதை நிதியமைச்சர் பார்த்துச் சொல்லட்டும் என்றார்.

திமுக ஆட்சியின் 100 நாள் முடிந்து இருக்கின்றது, இது ஆரம்ப காலம் தானே, நிதானமாக இருங்கள் இனிதான் தெரியும் என கூறிய அவர், திமுக ஆட்சி குறித்து சொல்ல பெரிதாக எதுவுமில்லை எனவும், சவாலான கொரோனா சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனாலும், மக்களுக்கு கொடுத்திருக்க கூடிய வாக்குறுதிகள், அவர்கள் முன்பாக இருக்கின்றது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...