கோவை: கோவையில் புதிதாக கண்டறியப்படும் கொரோனா நோயளிகளின் பயண விவரங்களை சேகரிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவைக்கு அருகிலுள்ள கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் கோவையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த மாதங்களில் 150க்கும் குறைவாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, மீண்டும் 200ஐ கடந்துள்ளது. இதனால், கோவை - கேரள எல்லையான வாளையார், மீனாட்சிபுரம், ஆணைக்கட்டி உள்பட 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கோவைக்குள் வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவர்களின் முழு பயண விவரங்களையும் சேகரிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் தற்போது புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர் சென்று வந்தவர்களாகவே உள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவார்களின் கடந்த ஒரு வாரத்தின் முழு பயண விவரங்களையும் சேகரித்து, எந்தப் பகுதிகளில் இருந்து அவர்களுக்கு தொற்று பரவியிருக்கிறது என்பது கண்டறியபட்டு வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பயண தகவலை சேகாரிப்பதன் மூலம், எந்த இடங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டுபிடித்து, புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உதவும், என்றார்.