கோவை: கோவையில் மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் வலியுறுத்தினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் பேசியதாவது:-
தமிழகம் தென்னை உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக உள்ளது. எனவே ரேஷன் கடைகள் மூலம் தென்னை வெள்ளத்தை விற்பனை செய்ய வேண்டும். அதே போன்று தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்க வேண்டும் என்றார்.
தென்னை வளர்ச்சி வாரிய மண்டல மையம் சென்னையில் உள்ளது. அதை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும், கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடி அதிகளவு உள்ளது, ஆனால் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, தக்காளியை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் வகையில் தக்காளி ஜூஸ் மற்றும் ஜாம் போன்ற பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறிச்சியில் உள்ள காய்கறி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று அவர் பேசினார்.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கிறது, அதை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறிய அவர், கிணத்துக்கடவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவைக் கூட்டத்தில் செ.தாமோதரன் வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.