ஓணம் பண்டிகையை கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

கோவை: கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



கோவை: கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஆடிமாதம் அஸ்த்தம் நட்சத்திரம் தினத்தன்று துவங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த 10 நாட்களும் தினமும் வீட்டின் முன் பூக்கோலங்கள் போட்டு, வழிபாடு செய்து கொண்டாடி வருவது வழக்கம். இதில், 10வது நாள் திருவோண நட்சத்திர நாளான இன்று திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது.



இந்த நிலையில், இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி பூக்கள் கோலம், நடனம், விருந்து என கொண்டாடும் ஓணம் பண்டிகை, இப்போது அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...