கோவையில் நடைபெற்ற ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0; மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை: கோவையில் நடைபெற்ற ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0; மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 கோவை: 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, உடல் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும், "ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0", நடைபெற்று வருகிறது. 

அதன்படி, கோவையில் இன்று காலை ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுங்காரா மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.பி.காளிராஜ் ஆகியோர் இந்த ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



மருதமலை சாலையில் உள்ள வடவள்ளி பகுதியில் இருந்து பாரதியார் பல்கலைக்கழக வளாகம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 75 பேர் கலந்து கொண்டனர்.



முன்னதாக, தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை வலிமையாக பராமரிப்பது குறித்த உறுதி மொழியினை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கைதட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்காரா, கோவையைச் சேர்ந்த பொதுமக்கள் இயல்பாகவே உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு உடையவர்கள் என்று ஊக்கமளித்து பேசினார். மேலும், அதிகாலை வேளைகளில் மாநகர் முழுவதும் கோவை பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதாகவும், அதற்கேற்ப மாநகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்வினை மத்திய மாநில அரசுகளோடு இணைந்து நேரு யுவ கேந்திரா, ஃபீல்ட் அவுட் ரீச் பியூரோ (field outreach bureau) மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...