கோவையில் விவசாயப் பாதுகாப்பு சங்கம் சார்பில் கருத்தரங்கம்: கோரிக்கைகளை திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரிடம் வழங்கிய விவசாயிகள்

கோவை: கோவை வேடப்பட்டியில் விவசாயப் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற திமுக சுற்றுச்சூழல் அணியின், மாநிலச் செயலாளர், கார்த்திகேய சிவசேனாபதி அவர்களது கோரிக்கைகளை, அரசிடம் கொண்டு சேர்ப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை வேடப்பட்டியில் விவசாயப் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற திமுக சுற்றுச்சூழல் அணியின், மாநிலச் செயலாளர், கார்த்திகேய சிவசேனாபதி அவர்களது கோரிக்கைகளை, அரசிடம் கொண்டு சேர்ப்பதாக உறுதியளித்தார்.



கலந்துரையாடல் நிகழ்வில், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தல், நொய்யலாற்றில் கழிவு நீர் உள்ளிட்ட மாசுகள் கலப்பதைத் தடுத்தல் மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் முறை ஆகியவற்றை வலியுறுத்தி பலரும் பேசினர்.



மேலும், பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், வேளாண் பகுதிகளில் காட்டு விலங்குகள் உட்புகுவதை தடுத்தல், நீரை தேக்கி வைத்து பயன்படுத்த தடுப்பணைகள், முறைகேடாக மணல் அள்ளுவதை கண்காணித்தல் போன்றவற்றை கோரிக்கையாக முன்வைத்தனர்.



இந்த நிகழ்வானது, கோவை பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் டாக்டர் திருமதி. நந்தினி ரங்கசாமி அவர்களின் பங்களிப்போடு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், வெள்ளிங்கிரி உழவன் அமைப்பின் இயக்குனர் லோகநாதன், புதுக்காட்டு வாய்க்கால் சங்கத்தலைவர் கே.ஆர்.கே சம்பத்குமார், உக்குளம் பாசன கிராம விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நீலி வாய்க்கால் பாசன சங்கத்தலைவர் சண்முகசுந்தரம், சித்திரைச்சாவடி அணைக்கட்டு விவசாய சங்க செயலாளர் விஸ்வநாதன், கட்சி சார்பற்ற விவசாய சங்க செயலாளர் தனபால், FBG விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் ராமசாமி, விவசாய பாதுகாப்பு சங்கத்தலைவர் ஞானசுந்தரம், கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்கள் மணிசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...