கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-ஆண்டுக்கு பிறகு காவல்துறை சாலை ரோந்து வாகனம் இயக்கம்.!!

கோவை: கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலையில் 5 -ஆண்டுக்கு பிறகு காவல்துறை சாலை ரோந்து வாகனம் இயக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலையில் 5 -ஆண்டுக்கு பிறகு காவல்துறை சாலை ரோந்து வாகனம் இயக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிபட்டி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றதால், காவல்துறை சார்பில் கண்காணிப்பு பணிக்கு இயக்கபட்டு வந்த காவல்துறை சாலை ரோந்து வாகனம் நிறுத்தபட்டது.

பின்னர், நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை யில் வாகன விபத்து மற்றும் சட்ட விரோத செயல்கள் அரங்கேரி வந்தது.

இந்த நிலையில் 5-ஆண்டுகளுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை காவல்துறை சாலை ரோந்து பணிகளை தொடங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்து அதற்கான வாகனத்தையும் வழங்கி உள்ளார்.



5 -ஆண்டுக்கு பிறகு ரோந்து வாகனம் இன்று முதல் இயக்கபட்டு வருகிறது.

இன்று கிணத்துக்கடவு காவல்நிலையத்திற்கு வந்த ரோந்து வாகனத்தை காவல்நிலைய ஆய்வாளார் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

24 -மணிக்கு நேரமும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஈச்சனாரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஈடுபடும் ரோந்து வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை விபத்து, வழிபறி சம்வங்களை தடுப்பது மற்றும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...