கோவை சோமனூர் பகுதியில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தெருவுக்கு சீல்.!

கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஒரே பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஒரே பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்வபுரம் காலனியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு 10 க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அதே பகுதியில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து ஒரு வாரமாக காய்ச்சல். இருமல், சளி தொந்தரவு இருந்து வந்ததையடுத்து, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அப்பகுதியை சேர்ந்த 17 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனால், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கருமத்தம்பட்டி கொங்கு மாநகரில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தொற்று பாதித்த பகுதிகளில் தகரம் வைத்து, அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது. பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மற்றும் உணவு பொருட்களை பெற கருமத்தம்பட்டி பேரூராட்சி மூலம் 3 நபர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பேரூராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், சாலையோரங்களில் கிருமி நாசினி தெளித்தும் தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

தொற்று பாதித்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை கொடிசியா சிகிச்சை மையத்திலும், 3 நபர்கள் கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...