கோவை: உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கி, விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு இல்லாமல், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் இன்று (ஆகஸ்ட் 20) கலந்துரையாடினார். இதில், நிலத்தை அளிப்பதில் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் எடுத்துரைத்தனர். மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகமிக அவசியமானது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் எடுக்கும் நடவடிக்கைகள் 15-ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டும் இதுவரை முழுமை அடையவில்லை. இதுபற்றிய கவலையால் தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்திய விமான நிலைய ஆணையம் (Airport authority of india) கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான வரைபடங்களை தயார் செய்தும், தேவையான நிலங்கள் இல்லாததால் அடுத்த கட்டப் பணிகளை தொடங்க முடியவில்லை.
தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி தந்தால்தான் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். நமது நாட்டில் இதுதான் நடைமுறை. ஆனால், கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2021-22 பட்ஜெட்டில் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியுள்ளனர்.
நிலம் கையகப்படுத்துவதற்காக நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, ஒருசிலர் பணம் பெற்றுள்ளனர். தங்களின் நீண்டகால உழைப்பில், சேமிப்பில் சிறிய, சிறிய வீடுகளைக் கட்டி வசித்து வருபவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு அரசு கொடுக்க தயாராக உள்ள பணம், வேறொரு இடத்தில் இடம் வாங்கி, வீடு கட்டுவதற்கு போதுமானதாக இல்லை. இதுதான் இப்போது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

இதுபோல சிறிய வீடுகள் உள்ள பகுதி மிகவும் குறைவாகவே உள்ளது. விவசாயப் பணிகள் நடைபெறாத அதிக அளவு நிலங்கள் இப்போதிருக்கும் விமான நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ளன. எனவே, மக்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லாமல் மாற்று இடங்களை கண்டறிந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களது சட்ட நடவடிக்கைகளுக்கு கோவை மாவட்ட பாஜக உறுதுணையாக இருந்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று இடமோ, உரிய இழப்பீடும் கிடைக்க வேண்டும். அதிகாரிகள் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும், செயல்பாடுகளுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.

எனவே, நிலத்தை எடுக்க நோட்டீஸ் அனுப்பியவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து திட்டத்தைப் பற்றி தெளிவாக விளக்கி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின்போது அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சரும், இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி இழப்பீ்ட்டுத் தொகையை உயர்த்தியிருக்கிறார். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவைப்படும் இடங்களில் சிறு சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு எப்படி கொடுக்கப் போகிறார்கள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலங்களை கையகப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.