கோவையில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தகவல்!

கோவை: கோவையில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. ஆனால், கோவையில் பருவமழை தாமதமாகத் தொடங்கியது.

வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. நகர்ப்பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருந்தது.

இந்த நிலையில், கோவையில் வருகிற 24-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது-

கோவையில் இன்று முதல் வருகிற 24ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வருகிற 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மாவட்டத்தில் 15 கிலோ மீட்டர் முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழையை பயன்படுத்தி சம்பா பருவத்திற்கு நெல் பயிரிட நாற்றங்கால் அமைக்கலாம் என வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...