வால்பாறை: வால்பாறை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை சென்றுள்ளார்.
வால்பாறை: வால்பாறை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை சென்றுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் வினேஷ்(38). மனைவி பெயர் ஓமனா. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அபினேஷ் (9) அனிநேஷ்(6).
சம்பவத்தன்று இவர் மனைவி வேலைக்கு வெளியே சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டு சென்ட்ரிங் பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வினேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சந்தேகப்பட்டுப் பார்த்து உடனடியாக வால்பாறை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வினேஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.