கோவை: கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து மாநிலச் செயலாளர் கூறியதாவது:-
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் இது எப்படி என்ற கேள்வி எழுகின்றது எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் விவாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுற்றுச் சூழல் விவகாரம், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது எனவும், அதைச் செய்யாமல் மூர்க்கத்தனமான முறையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒன்றிய அரசு மீறுகின்றது எனக் குற்றம்சாட்டினார்.
ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகளைக் கண்டித்து சி.பி.ஐ கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை தமிழகம் முழுவதும் 5000திறக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்த இருப்பதாகவும், இந்த மக்கள் நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சபாநாயகர் அமைச்சர் தேர்வு செய்யப்பட்டு விவாதித்து தீர்மானங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள், வரம்பு மீறல் குறித்து சிறிய அளவிலான புத்தகம் 5-ரூபாய் விலைக்கு 5-லட்சம் பிரதிநிதிகள் அடித்து மக்களிடம் விநியோகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சொல்வது போல் விவசாயிகளுக்கு பா.ஜ.க எந்த பாதிப்பும் இல்லை எனில் டெல்லியில் ஏன் விவசாயிகள் போராட வேண்டும் என கேள்வி எழுப்பிய முத்தரசன், பாராளுமன்ற மரபுகளை அரசு பின்பற்றாமல் இப்போது எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகின்றனர் என தெரிவித்தார்.
கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்த விவகாரத்தில் கைதானவர்கள் அனைவரும் ஏவப்பட்டவர்கள்தான் எனவும், அவர்கள் தங்கள் சொந்த காரியத்திற்காக இதைச் செய்ய வில்லை என தெரிவித்தார்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என போயிருக்கலாம் என கூறிய அவர் இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதற்குப் பயப்படுகின்றார் என கேள்வி எழுப்பினார்.
கைது செய்யப்பட்ட நபர் 3-மணி நேரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாக்கு மூலம் கொடுத்து இருக்கின்றார் எனவும் அந்த வாக்கு மூலம் தொடர்பாக அதிகார்வபூர்வ அறிவிப்பு வராத நிலையில், யூக செய்திகள் பத்திரிகையில் வருகின்றது.
இதைப் பார்த்து எதற்காக எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகின்றார் என கேள்வி எழுப்பினார். விசாரணையில் அவர்கள் என் பேரைக் கூடச் சொல்லி இருக்கலாம், நான் பயப்பட வில்லை என கூறிய முத்தரசன், எடப்பாடி பழனிச்சாமி ஏன் பயப்படுகின்றார் என தெரியவில்லை எனவும் தெரிவித்த அவர், என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அது தெரிகின்றது எனவும் சூசகமாகத் தெரிவித்தார்.
பேட்டியின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.