கோவை: செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி10-வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி10-வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை செட்டி பாளையம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் கூலித்தொழிலாளி. இவரது மகன் அஸ்வின்(10). இவர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று அரவிந்த் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10-வயது சிறுவர்கள் ஒருவருடன் செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றார்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வின் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். உடன் இருந்த சிறுவர்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கிய அஸ்விந்த்தை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அஸ்வின் இறந்தார். இது தொடர்பாக செட்டி பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.