கோவை: வி.ஏ.ஓ மற்றும் கிராம உதவியாளர் கைது செய்ய வலியுறுத்தி அன்னூரில் கடைகளை அடைத்து போராட்டம் நடந்து வருகிறது.

அன்னூர் ஒன்றியம் ஒற்றர் பாளையம் ஊராட்சியில் விவசாயி கோபால்சாமி தனது ஆவணத்தில் செய்யப்பட்ட தவறு குறித்துக் கேட்டபோது வி.ஏ.ஒ கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கிராம உதவியாளர் முத்துசாமி விவசாயி கோபால்சாமி காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இது குறித்து விசாரிக்கக் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்தார் குழு அறிக்கையின் பேரில் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை சட்டம் கொலை மிரட்டல் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் 5-வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விவசாயி கோபால்சாமி கிராம உதவியாளர் முத்துசாமி சரமாரியாகத் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ வெளியானது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயச் சங்கங்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று அன்னூர் ஒன்றியத்தில் 1 பேரூராட்சி 21 ஊராட்சிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். கோபால் சாமியைத் தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமி மற்றும் விசாரணைக் குழுவில் இடம்பெற்ற தவறான தகவல் அளித்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஆகியோரை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அவர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் வன்கொடுமை சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் டீக்கடைகள் பேக்கரி ஓட்டல் மளிகை ஜவுளி மொபைல் போன் ஷாப் என அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில்:-
இந்த போராட்டத்திற்குப் பிறகுக் கிராம உதவியாளர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யவில்லை எனில் அடுத்த கட்டமாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு விவசாய சங்கத்தினர் தெரிவித்தினர்.