கோவையில் உள்ள பிரபல ஹோட்டலின் 4.12 கோடி வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

கோவை: கோவையில் உள்ள பிரபல ஹோட்டலின் 4.12 கோடி வரி பாக்கியை உடனடியாக செலுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் ராஜகோபாலன் சுங்காரா உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் உள்ள பிரபல ஹோட்டலின் 4.12 கோடி வரி பாக்கியை உடனடியாக செலுத்தக் கோரி மாநகராட்சி ஆணைய‌ர் ராஜகோபாலன் சுங்காரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை - அவிநாசி ரோட்டில், நவஇந்தியா பஸ் ஸ்டாப் அருகில், 'ரேடிசன் ப்ளு' எட்டு மாடி ஓட்டல் செயல்படுகிறது. 2,06,695 சதுரடிக்கு கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டிருக்கிறது. ஆனால், 2,20,363 சதுரடிக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிமுறை மீறி கட்டுமானம் செய்திருப்பது, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

2008க்கு முந்தைய வருடாந்திர வாடகை மதிப்பு நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போதைய வருடாந்திர வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. வரி விதிப்பை மாற்றித்தர வேண்டும் என, ஓட்டல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான ஆவணங்களை, மாநகராட்சி ஆணையர் ராஜகோபாலன் சுங்காரா மற்றும் வருவாய் பிரிவினர் மீண்டும் ஆய்வு செய்தனர்.

2008-க்கு முன் கட்டிய கட்டடங்களுக்கே, 2008-க்கு முந்தைய வருடாந்திர வாடகை மதிப்பு நிர்ணயம் செய்ய முடியும். புதிய கட்டடங்களுக்கு இவ்விதி பொருந்தாது என கூறி, கோரிக்கையை ஆணையர் நிராகரித்தார்.

இறுதியாக, 2016-17 முதல், 2021-22 வரை செலுத்த வேண்டிய சொத்து வரி, 4 கோடியே, 4 லட்சத்து, 76 ஆயிரத்து, 589 ரூபாய், காலியிட வரி, 7 லட்சத்து, 68 ஆயிரத்து, 745 ரூபாய் என மொத்தம், ரூ. 4,04,76,589 கோடியை உடனடியாக செலுத்த வேண்டுமென, மாநகராட்சி ஆணையர் ராஜகோபாலன் சுங்காரா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...