கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தினமும் ஆர்வத்தோடு வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.
ஆனால், தொடர்ந்து வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதியில்நடத்தப்படுவதில்லை. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 60 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 38 லட்சம் ஆகும். இதில், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 27 லட்சம் ஆவர்ம் இவர்களில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 16 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது கோவை மாவட்டத்தின்மக்கள் தொகையில் இது 60 சதவீதமாகும்.
இதுதவிர இரண்டு தவணை தடுப்பூசிகளும் 3 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் 14.18 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் கொரோனா 3 ஆவது அலையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.