கிணத்துக்கடவு அருகே திமுக சார்பில் மறைந்த ஊராட்சி தலைவர் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்.!!

கோவை: கிணத்துக்கடவு அருகே திமுக சார்பில் மறைந்த ஊராட்சி தலைவர் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அருகே திமுக சார்பில் மறைந்த ஊராட்சி தலைவர் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக குமார் (எ)ஜெயக்குமார் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகுமார் மரணம் அடைந்தார். மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்புக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்தநிலையில் மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாருக்கு இன்று திமுக சார்பில் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் 10நெம்பர் முத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.



கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத மலை சேனாதிபதி கலந்து கொண்டு மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருத மலை சேனாதிபதி கூறியதாவது:-

மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமாரின் இறப்பு திமுகவுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும், பத்தாம் நம்பர் முத்தூர் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு சமூகப் போராளியாக இருந்தார் என்றும் பேசினர்.

இதைத்தொடர்ந்து பேசிய கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கூறியதாவது:-



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் என்னை வெற்றி பெறச் செய்வதற்காகப் பாடுபட்டார் என்றும், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டி முழுமையாக அர்ப்பணித்து வந்தார். என்றும், அவரது மறைவு பத்தாம் நம்பர் முத்தூர் மக்களுக்கும், திமுகவுக்கும் பேரிழப்பு என்றும் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு (எ)திருநாவுக்கரசு, மதுக்கரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், கிணத்துக்கடவு பேரூர் கழக செயலாளர் கனகராஜ், கிணத்துக்கடவு ஒன்றிய பொறுப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்ட விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேர்ந்த நிர்வாகிகளும் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...