திருப்பூர் மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் மின்னணு ரோந்து செயலி - மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தி வைத்தார்!

கோவை: திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநிலத்திலேயே முதன்முறையாக மின்னணு ரோந்து செயலியை மாநகர காவல் ஆணையர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாநிலத்திலேயே முதன்முறையாக மின்னணு ரோந்து செயலியை மாநகர காவல் ஆணையர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார்.



திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பூர் மாநகர பகுதிக்குள் குற்றங்களை தடுக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவும் காவல்துறையினரின் ரோந்து பயணங்களை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின்னணு ரோந்து செயலி எனப்படும் ஈ-பீட் அப்ளிகேஷனை மாநகர காவல் ஆணையர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்டு 23 ரோந்து ஏரியாக்கள் பிரித்து ஒவ்வொரு ஏரியாவிலும் இரண்டு காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணி புரியும் வகையில் சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரிகள் தங்களது ஏரியாவில் உள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்கள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பட்டா புத்தகங்களில் கையொப்பமிட்டு ரோந்து பணி புரிந்து வரக்கூடிய சூழ்நிலையில் அவற்றை நவீனப்படுத்தும் வகையில் மின்னணு ரோந்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல, முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடினை ரோந்து காவல் அதிகாரிகள் தங்களது கைப்பேசியில் உள்ள செயலியின் மூலம் ஸ்கேன் செய்யப்படும்போது அந்த பகுதிக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களிடம் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ரோந்து காவல் அதிகாரிக்கு தெரிவிப்பதுடன் அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள காவல் அதிகாரிகளை எச்சரிக்கையாகவும், குற்றம் செய்தவர் தப்பிச் செல்ல முடியாத வகையில் கண்காணிக்கவும் வைக்க முடியும் என்றனர்.

இந்த மின்னணு ரோந்து செயலி காவல்துறையினருக்கு உபயோகமாக இருக்கும் எனவும் மாநகர காவல் ஆணையர் வனிதா தெரிவித்தார். மேலும், ரோந்து பணியில் ஈடுபடக் கூடிய காவலர்களின் பணியை மாநகர காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...