கோவை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். எம்.எல். ஏ. வானதி சீனிவாசனின் கோரிக்கைக்கு முதல்வர் பதில்!

கோவை: கோவை மத்திய சிறையை மாற்றி பூங்கா உருவாக்கப்படும்; எம்.எல். ஏ வானதி சீனிவாசன் கோரிக்கைக்கு முதல்வர் பதில்.



கோவை: கோவை மத்திய சிறையை மாற்றி அங்கு பூங்கா உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 13ம் தேதி துவங்கியது.கூட்டத்தொடரில் பங்கேற்ற பாஜகவின் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன் கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலையை இடம்மாற்றி அந்து ஒரு பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், கடந்த

2010 ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை கோவையில் நடைபெற்றஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின், நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் உலகத் தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் மத்திய சிறைச்சாலை படிப்படியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

ஆனால், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக திட்டம் குறித்து எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், திமுக அரசு, கோவை மத்திய சிறைச்சாலை உள்ள இடத்தில் சர்வதேச தரத்தில் பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும்என்று சட்டன்ற உறுப்பினர், வானதி சீனிவாசனின் கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

'கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக அத்திட்டத்தை பற்றி யோசிக்கவில்லை, சிந்திக்கவில்லை. எனவே, உங்களுடைய கோரிக்கை இந்த ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்' என்று முதல்வர் முக. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...