கோவை மாநகராட்சியில் மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் தாமதம்; வரிவசூல் பணிகள் முடக்கத்தால் மக்கள் அவதி!

கோவை: கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் காரணமாக, வரி வசூல், குடிநீர் கட்டணம் செலுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் காரணமாக, வரி வசூல், குடிநீர் கட்டணம் செலுத்தும் பணிகள் ஒரு வாரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் யூ.டி.ஐ.எஸ் எனப்படும் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 9 முதல் 15ம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, வணிக உரிமம் தொடர்பான சேவைகள், சொத்துவரி கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகளும் அந்த நாட்களில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 16 ஆம் தேதி முதல் வரி செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதள பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் வரும் 23ம் தேதி முதல் வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி பெறுவதற்கு வரும் 21ம் தேதி, கடைசி தேதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் மாநகராட்சி அலுவலகங்களில் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பட்டாசு கடைகள் அமைக்கும் விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...