கோவை: 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை: 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியில் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு நடத்தி கல்லூரியின் இயக்குனர் ராஜாராம், 14-அடி நீளம் மற்றும் 21-டி அகலம் உள்ள மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கல்லூரியில் மாணவர்கள் இல்லாமல் எளிமையான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மென்பொருள் இயக்குநர் கண்ணன் நரசிம்மன், உடற்கல்வி இயக்குநர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.