75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.!! வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை.!!

வால்பாறை: வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


வால்பாறை: வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்பாறை காவல் நிலையத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து காவல்துறையினர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க வந்த காவல் ஆய்வாளர் கற்பகம் அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை நகராட்சியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முன் களப்பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டாட்சியர் அலுவலகம் தீயணைப்புத்துறை நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...